காவிதிப்பாக்கத்தில் ஆயிரம் ஏர் பூட்டி உழும் வேளாளர் தலைவரின் மகள் வாசுகியை ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த வள்ளுவன் காதல் கொண்டு மணமும் முடித்தார். அவர்களுக்கு அழகே உருவாக மகள் பிறந்தாள். ?முல்லை?யென பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்கள்.
வாசுகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் அய்யனிடம் ?நான் அமுது படைக்கும் போதெல்லாம் ஊசியும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் எடுத்து வைக்கச் சொல்வீர்களே. இது நாள் வரையில் நீங்கள் அதை பயன்படுத்தியதுக் கூட கிடையாது. அதன் அர்த்தம் என்ன?? எனக் கேட்கிறார். அதற்கு திருவள்ளுவர் ?உலகத்தில் மக்கள் பலர் உண்ண உணவில்லாமல் வாடுகிறார்கள். உணவை யாரும் வீணாக்கக் கூடாதென்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன். ஆனால் நான் இது நாள் வரையில் உணவை சிந்தி வீணாக்கியதில்லை. அதனால் தான் நான் அதை பயன்படுத்தவில்லை? என்றார். அய்யனின் திருக்குறளை அய்யன் வாயால் கேட்டுக் கொண்டே வாசுகி அய்யன் மடியிலேயே உயிர் துறக்கிறார். வாசுகியின் மறைவுக்கு பின் மனத் துறவு பூண்ட திருவள்ளுவர் சில நாட்கள் கழித்து மாசித் திங்கள் உத்திரநாளில் இயற்கை எய்தினார்.
Am proud to be vellalan
ReplyDelete